இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் தீபாவளிப் பண்டிகை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி தினத்திற்காக ஏற்கனவே பட்டாசு வெடிப்பது தொடர்பான நேரக்கட்டுப்பாடு குறித்த அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வட சென்னையில் காற்று மாசு குறியீடு அதிகரித்துள்ளது. சென்னையில் பட்டாசு படிப்பதற்கான நேரம் முடிந்த நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் புகை நிரம்பி உள்ளது. மதியம்வரை சென்னையில் காற்று மாசு 100 என இருந்த நிலையில், இரவு நேரம் பட்டாசு வெடித்ததால் 150 என அதிகரித்துள்ளது. பட்டாசு வெடித்ததால் தென் சென்னையை விட வடசென்னையில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. மணலியில்-344, நுங்கம்பாக்கம்-272, பொத்தேரி-151, அம்பத்தூர்-1 50 என காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசால் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் சாலையில் எதிர்த் திசையில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.