Skip to main content

பி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்!!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

INCIDENT IN NAGERKOIL

 

நாடு முமுவதும் படித்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை கோடிகளைக் கடந்து நிற்கின்றன. இதில் தனியாா் நிறுவனத்திலாவது வேலை ஒன்று கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில் பலா் முயன்று வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இன்ஜினியாிங் படித்த ஒரு இளைஞா், 'எனக்கு வேலை கிடைத்தால், என் உயிரைக் குலதெய்வமான மாடசாமிக்குத் தருவேன்' என வேண்டுதல் கொடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.


நாகா்கோவில் அருகே எறும்புக்காடு பத்தன்கோடு பகுதியைச் சோ்ந்த செல்லசாமி மகன் நவீன் (32). என்ஜினியாிங் பட்டதாரியான இவா், பள்ளி கல்லூாியில் படிக்கும்போது அதிக மதிப்பெண் எடுத்து சக மாணவா்கள் மற்றும் ஆசிாியா்கள் மத்தியில் நல்ல மாணவனாக வலம் வந்துள்ளார். இதனால் தன்னுடைய எதிா்காலம் நன்றாக இருக்கும் எனக் கனவு கண்டுள்ளார் நவீன்.

இந்தநிலையில், இன்ஜினியாிங் முடித்து 11 ஆண்டுகளாகியும் வேலை கிடைக்காததால், கடந்த ஒரு வருடமாக நவீன் விரக்தியில் இருந்துள்ளார். அவர் நண்பா்கள் சிலர், 'உனக்கு வேலை கிடைத்தால், உன் குலசாமியான மாடசாமிக்குப் பொங்கல் இட்டு நேர்த்திக் கடன் செலுத்துவதாக' வேண்டிகொள் என ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் நவீனோ, 'வேலை கிடைத்தால், என் உயிரைத் தருவேன்' என வேண்டிக் கொண்டாராம். இந்த விசயம் நவீனின் நண்பா்கள், பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் யாருக்கும் தொியாதாம். இதற்கிடையில் நவீனுக்கு, மும்பையில் தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கியில் உதவி மேலாளா் வேலை கிடைத்தது. நவீனும் அங்கு சென்று பணியில் சோ்ந்து 8 நாட்கள் வேலை செய்தாராம்.

 

INCIDENT IN NAGERKOIL


இந்த நிலையில், 30 -ஆம் தேதி நாகா்கோவில் புத்தோி ரயில்வே பாலத்தில், ரயிலில் அடிபட்டு வாலிபா் ஒருவா் இறந்து கிடந்தாா். ரயில்வே போலீசாா் நடத்திய விசாரணையில், அவா் நவீன் எனத் தொியவந்தது. அவாின் சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில், 'எனக்கு வேலை கிடைத்தால் குலசாமி மாடசாமிக்கு என் உயிரை கொடுப்பேன் என்றேன் அதனால், அதை நிறைவேற்றும் விதமாக என் உயிரை கொடுத்திருக்கிறேன்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது

இச்சம்பவம், அவாின் பெற்றோா் மற்றும் குடும்பத்தினா் மட்டுமல்ல அக்கம் பக்கத்தினரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கையா?

 

 

 

சார்ந்த செய்திகள்