Skip to main content

தனியார் பள்ளியில் நடந்த விபரீதம்; கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

Published on 03/01/2025 | Edited on 03/01/2025
Incident happened child after falling into a sewage tank at Private School

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், பழனிவேல்- சிவசங்கரி ஆகிய தம்பதியின் மூன்று வயது குழந்தையான லியால் லட்சுமி எல்.கே.ஜி படித்து வந்தார். 

இந்த பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது. அந்த சேதமடைந்த கழிவுநீர் பகுதியில், லியால் லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். கழிவுநீர் தொட்டி, மீது லியா லட்சுமி விளையாடும் போது அந்த இரும்புத்தகடு முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. இதில், அந்த குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் திடீரென்று விழுந்துள்ளார். குழந்தையில் அலறல் சத்தத்தை கேட்ட பள்ளி நிர்வாகிகள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  ஆனால், அந்த தொட்டிக்குள் விழுந்ததால் லியா லட்சுமி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த குழந்தையின் உடலை மீட்டு அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையில், மூன்று வயது குழந்தை, எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? என்றும், பள்ளி கழிவுநீர் தொட்டி சரிவர மூடப்படவில்லையா? என்றும் கேள்விகளை முன்வைத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்