Skip to main content

கருங்காலி மரங்கள் கடத்தல்; சென்னையில் 5 பேர் கைது!

Published on 14/10/2024 | Edited on 14/10/2024
Incident of forest black trees in Theni district

தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இயற்கை வளங்களும் காடுகளும் வயல்களும் மழைப் பகுதிகளும் நிறைந்த பகுதியாகும் மலைப் பகுதிகளில் விலை உயர்ந்த தேக்கு, சந்தனம் கருங்காலி, நெல்லி, வாலா, உசுலு உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட வகை மரங்கள் வளமுடன் உள்ளன. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காடுகளிலும் வனப்பகுதியிலும் உள்ள கருங்காலி மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். அதன் பின்னர் அம்மரத்தின் வைரம் வாய்ந்த பகுதியை மட்டும் செதுக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குரங்கனி - கொட்டகுடிமலை கிராமத்தைச்  சேர்ந்த இந்த மூன்று நபர்களும், வத்தலக்குண்டு சேர்ந்த இரண்டு நபர்களும் சேர்ந்து புஷ்பா திரைப்படம் பாணியில் ஆற்று வெள்ளத்தின் வெட்டிய மரங்களை தூக்கி எரிந்துள்ளனர். ஆற்றின் வெள்ளப் போக்கில் கடத்தி வரப்பட்டு போடி பகுதியில் வெட்டிய மரங்களை ஆட்டோ மூலம் கொண்டு செல்லப்பட்டு சென்னையில் விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

Incident of forest black trees in Theni district

அப்போது நுண்ணறிவு போலீசார் சுமார் 400 கிலோ எடை கொண்ட கருங்காலி மரத்தைப் பறிமுதல் செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ஐந்து பேரையும் கைது செய்து போடி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக போடி வனத்துறை அதிகாரிகள் வெட்டி கடத்திவரப்பட்ட மரங்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்து வரும் நிலையில் குற்றம் சாட்டப் பட்ட ஐந்து நபர்களை ரகசிய இடத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர்.

அதே சமயம் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் கஞ்சா அபி புகையிலை மது பாட்டில் கடத்திப்பட்டு வரும் நிலையில் தற்போது கருங்காலிக் கட்டை சந்தனக் கட்டை கடத்தல் கும்பல் அதிகரித்து வருகின்றது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாகக் கைது செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இச்தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்