அரசு மருத்துவ கல்லூாரி மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.
தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே வருகிறது. இந்த கொடூர குற்ற செயலில் ஈடுபடும் வக்கீர புத்தி கொண்டவா்கள் கடுமைாக தண்டிப்பட வேண்டும் என போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அச்சட்டம் வந்த பிறகும் அதை பொருட்படுத்தாமல் பெண் குழந்தைகளை சீண்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதில் தமிழகத்தில் சமீப காலமாக தினம் தினம் ஓன்றுக்கு மேற்ப்பட்டோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனா். இது பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குமாரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமயைில் வட மாநிலத்தை சோ்ந்த பெண் ஓருவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டியிருந்தார். அவருடன் தன்னுடைய 11 வயது பெண் குழந்தையையும் உடன் வைத்திருந்தார். அந்த பெண் குழந்தை மருத்துவமனை வளாகத்தில் அனைவரிடமும் சகஜமாக பேசி அங்கு மிங்கும் ஓடியாடி விளையாடி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஓப்பந்தத்தின் அடிப்படையில் காவலாளியாக பணி புரியும் சுபின் (24) என்ற வாலிபா் அந்த பெண் குழந்தையை நைசாக அழைத்து சென்று ஒரு அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது அந்த குழந்தை சத்தம் போட்டு அழுததால் மற்ற நோயாளிகளின் உறவினா்கள் இதை பார்த்துவிட்டனா். இதனால் சுபின் அங்கிருந்து தப்பி ஓடும்போது மருத்துவமனை ஊழியா்கள் அவனை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், சுபின் அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் குமுதாவிடம் புகார் கூறினார்கள். உடனே சம்பவ இடத்துக்கு சென்ற குழுதா பாதிக்கப்பட்ட குழந்தையிடம் விசாரித்து விட்டு நாகா்கோவில் அனைத்து மகளீா் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் தப்பி ஓடிய சுபினை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இச்சம்பவம் மருத்துவ மனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.