Skip to main content

'முன்பைவிட மேம்படுத்தப்பட்டுள்ளது' - இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு உடனடி பதிலளித்த தமிழக காவல்துறை

Published on 08/07/2023 | Edited on 08/07/2023
nn

 

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், நேற்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் தேனியில் அவரது வீடு அமைந்துள்ள ரத்தினம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

 

nn

 

தொடர்ந்து இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது இந்த தற்கொலை தொடர்பான கேள்விக்கு, “ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். காவலர் நலவாழ்வு திட்டத்தை துவக்கி 1.5 லட்சம் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு மன அழுத்தத்தை போக்குவதற்காக அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. டிஐஜி விஜயகுமார் மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்று அரசு முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். சிபிஐ விசாரிக்க வேண்டும். காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வந்த கவுன்சிலிங் தற்போதைய அரசால் கைவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

 

nn

 

இந்நிலையில் காவல்துறையினருக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கான கவுன்சிலிங் வழங்கும் திட்டம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது எனத் தமிழக காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வந்த கவுன்சிலிங் கைவிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு வைத்திருக்கும் நிலையில், தற்போது காவல்துறை சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் மற்றும் கவுன்சிலிங் திட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினருக்கும் மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கான இந்த கவுன்சிலிங் வழங்கும் திட்டம் முன்பைவிட மேம்படுத்தப்பட்டுள்ளது எனக் காவல்துறை சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்