Published on 13/07/2021 | Edited on 13/07/2021
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட குழுவை கடந்த மாதம் 10 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நியமித்தார். உறுப்பினர்களாக மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த குழு செயல்பட தடை கோரி தொடரப்பட்டிருந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த இந்த குழுவினர் நாளை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.