அண்மைக் காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.
அண்மையில் ஓடும் ரயிலுக்கு பக்கவாட்டில் நடந்து செல்வது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் ரயில் மோதி தூக்கி வீசப்படும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு இளைஞர் கஞ்சா புகைத்து ரீல்ஸ் செய்து வெளியிட்டது தொடர்பாக போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அரசுப் பேருந்துகளை மட்டும் குறிவைத்து தடுத்து நிறுத்தி அதன் முன் நடனம் ஆடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை எடுத்து ரீல்சாக வெளியிட்டு வரும் இளைஞரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் குவிந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் வித்தியாசமாக வீடியோக்கள் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு நடந்துகொள்வது தவறான சான்றுகளை உருவாக்குவதாக சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.