
போதைப்பொருள் பழக்கத்திற்கு இளைஞர் சமுதாயம் அடிமையாவது கவலை அளிக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். அங்கு முடிவடைந்த பல திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிதாக தொடங்க இருக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அந்த திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இந்நிலையில் நேற்று கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "இளைஞர் சமுதாயம் குறித்து கவலை இருக்கிறது. போதைப் பொருள் பழக்கத்திற்கு ஒரு சிலர் அடிமையாகின்றனர். அதற்காகவே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். புதிதாக யாரும் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க வேண்டும். ஒரு மாணவர் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாவது அவருக்கும் அவரது குடும்பத்திற்கு மட்டும் ஏற்படும் பாதிப்பு அல்ல. அது இந்த மாநிலத்தையே பாதிக்கும். அதே சமயம் மாணவிகளும் இந்த பழக்கத்திற்கு அடிமையாவது கவலை அளிக்கிறது" என கூறியுள்ளார்.