திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 562 பயனாளிகளுக்கு ரூ.76.77 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்த விழாவில், அமைச்சர் சக்கர பாணி பேசிய போது, “தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக கழிவுநீர் வாய்க்கால்கள், பொது சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு பாதுகாப்பான சாலை பயணத்தை வழங்கும் வகையில் சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத் துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மழை, வெயில் காலங்களில் பயணிகளை பாதுகாக்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 79 பயனாளிகளுக்கும், பழனி வட்டத்தில் 123 பயனாளிகளுக்கும், மின்சாரவாரியம் சார்பில் 185 பயனாளிகளுக்கும், ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் 43 பயனாளிகளுக்கும், தொழிலாளர் நலவாரியம் சார்பில் 7 பயனாளிகளுக்கும், வேளாண் மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.27 இலட்சம் மதிப்பீட் டிலும், தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 562 பயனாளிகளுக்கு ரூ.76.77 இலட்சம் மதிப்பீ ட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், மாநில அரசு நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.1500-லிருந்து ரூ.2000-ஆக உயர்த்தியும், முதியோர் உதவித்தொகையை உயர்த்தியும் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கவும், வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் திட்டமும் செயல்படு த்தப்படுகிறதுகுடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால் தகுதியுள்ள மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது” என்று கூறினார்.