Published on 16/12/2020 | Edited on 16/12/2020

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் மதுரை, தேனி, திண்டுக்கல் எனத் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்டமாக கன்னியாகுமரி சென்ற கமல்ஹாசன், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோனை மேற்கொண்டார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டினம் அருகே செய்தியாளர்களைச் சந்தித்த கமல்,
திமுகவோடு கூட்டணி ஏற்படுத்த உதயநிதியை சந்தித்ததாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, திமுகவோடு கூட்டணி குறித்து உதயநிதியை நான் சந்தித்ததாக வெளியான தகவல்கள் யூகம் தான். யாரையும் ரகசியமாகச் சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நானும் ரஜினியும் இணைவது குறித்து, அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். ஆனால், ரசிகர்கள் சந்தோசப்படுகின்றனர். தமிழ் ஈழத்திற்குக் குரல் கொடுக்கும் தேவை வந்தால், கட்டாயம் குரல் கொடுப்பேன் என்றார்.