வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவரது இல்ல திருமண விழாவை 30 கோடி ரூபாயில் நடத்தியதாக நேற்று மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தியிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, ''எதில் அரசியல் பண்ணவேண்டும் என ஒரு நாகரீகம் கருதி அரசியல் பண்ண வேண்டும். இதுதான் சமூக நீதியா? இதுதான் திராவிட மாடலா? என்று கேட்கிறார். ஆமாம் இதுதான் திராவிட மாடல். கல்யாணத்தில் ஏழை மக்கள், சாதி சமுதாயத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து சாப்பாடு போட்டோம்.
சாப்பாடு போட்டால் என்ன? ஒரு இலைக்கு எவ்ளோ வரும். அதிகபட்சமா 300 ரூபாய் வருமா? 50 ஆயிரம் பேர் சாப்பிட்டுருப்பாங்களா ஒன்றரைக்கோடி வருமா. நான் இதை அரசியலாக்க வேண்டாம் என்று பார்த்திருந்தேன். 30 கோடி என்று சொல்கிறாரே இவர்தான் கணக்குப்புள்ள வேலை பார்த்தாரா? அப்போ பொதுச்செயலாளர் ஆவதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து வந்திருக்கிறார்'' என்றார்.