Skip to main content

''கனிமொழி எம்.பி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்''-அமைச்சர் விஜயபாஸ்கர்

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

Vijayabaskar

 

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இருந்த திமுக கனிமொழி எம்.பி கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விரைவில் குணமடைந்து வர வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

Vijayabaskar

 

இந்தநிலையில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கனிமொழி எம்.பி கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் அறிந்து வருந்தினேன். அவர்கள் பரிபூரண நலம்பெற பிரார்த்திக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்