Skip to main content

ஹைட்ரோ கார்பன் வேண்டாம்... ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு கைஃபா அமைப்பு கடிதம்

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

 

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் வேண்டாம் என்று புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த காலங்களில் கிராம சபை தீர்மான கோரிக்கைகள் கொண்டு வந்தாலும் செவி சாய்க்காத மத்திய அரசு தற்போது மக்களின் கருத்து கேட்காமல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு செய்துள்ளது.
 

Letter to panchayat leaders



மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை மறுபடியும் கலங்கடித்துள்ளது. வயலில் விளைந்துகிடக்கும் நெல்லைக் கூட அறுவடை செய்யாமல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகமுழக்கமிட தயாராகி வருகின்றனர் விவசாயிகள்.


இந்த நிலையில் தான் அதிகாரம் படைத்த கிராம சபைகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்ற இளைஞர்கள் தயாராகி உள்ளனர்.

 

இந்த நிலையில் தான் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் 6 தாலுகாகளில் நீர்நிலை சீரமைப்பு செய்து பல வருடங்களுக்கு பிறகு  தண்ணீரை சேமித்துள்ள இன்னும் பல ஏரி குளங்களை தூர்வாரி வரும் தன்னார்வ அமைப்பான கைஃபா அமைப்பினர் அவசரமாக இரு மாவட்டங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.



 

அந்த கடிதத்தில்.. தங்கள் கிராமத்தில் தங்கள் கிராமத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் வேண்டாம். மக்கள் கருத்து கேட்காமல், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு செய்துள்ளதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். இதனை பல கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்