Skip to main content

ஒருதுளிகூட மழை பொழியாதா நாட்கள் எத்தனை...? மோசமான வரலாற்றை படைக்க காத்திருக்கும் சென்னை!

Published on 16/06/2019 | Edited on 16/06/2019

சென்னை மாநகரமே தண்ணீர் இன்றி தவித்துவரும் நிலையில் தொடர்ந்து ஒருதுளிகூட மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கையில் சென்னை மாநகரம் மோசமான புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது. 

 

chennai

 

சென்னையில் கடந்த 191 நாட்களாக ஒருதுளி கூட மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் பொழுதுதான் சென்னையில் கடைசியாக மழைபெய்தது. 2015 ஆம் ஆண்டில் தொடர்ந்து 193 நாட்கள் சென்னையில் மழை பெய்யாமல் இருந்ததுதான் மோசமான வரலாறாக இருந்தது.

 

chennai

 

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து தற்போது வரை 191 நாட்களாக ஒரு துளி மழைக்கூட பொழியாமல் இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இதேநிலைமை நீடித்தால் புதிய மோசமான வரலாறு படைக்கும் சென்னை என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. 

 

இந்தநிலை தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரலாற்றை சென்னை மாநகரம் படைக்கும். தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். விட்டால் ஒரு துளிகூட மழைபொழியாத நாட்களில் சென்னை இரட்டை சதம் அடித்துவிடுமோ என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் சமூக மற்றும் சூழியல் ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்