Published on 03/11/2018 | Edited on 03/11/2018

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா பேட்டியளித்துள்ளார்.
கடலூரில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "அரசு உழியர்களின் பிரதான கோரிக்கையான பங்களிப்பு ஓய்வுதியம் ரத்து செய்ய வேண்டும், 21 மாத உதிய நிலுவை தொகை வழங்கிட வேண்டும்,
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக அரசால் நிறைவேற்றபட வேண்டும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றோம்.
அதேசமயம் அரசு எங்களை அழைத்து பேசாத பட்சத்தில் வருகின்ற 10-ஆம் தேதி நடைபெறும் உயர் மட்ட குழு கூட்டத்தில் சிறை நிரப்பும் போரட்டம் அறிவிக்கப்படும் " என்றார்.