Skip to main content

வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள்... விவேக் லட்சியத்தை நிறைவேற்றும் இளைஞர்கள்!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

 House to house saplings ... Young people fulfilling Vivek's ambition!

 

திரைப்பட நடிகராக மட்டுமின்றி சூழலியல் ஆர்வலராக தமிழக இளைஞர்களிடம் நன்மதிப்பை பெற்றவர் நடிகர் விவேக். 'கிரீன் கலாம்' என்ற திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நட இளைஞர்களையும் மாணவர்களையும் அழைத்தார். தானாக முன்வந்து மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பவர்களை அடையாளம் கண்டு பாராட்டியும் உள்ளார். இப்படி தமிழக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தரின் லட்சியமான 'கிரீன் கலாம்' திட்டம் முழுமையாக நிறைவேறும் முன்பே திடீரென அவரை மரணம் தழுவிக் கொண்டது.

 

 House to house saplings ... Young people fulfilling Vivek's ambition!

 

நடிகர் விவேக்கின் மரணத்தை எதிர்பார்க்காத இளைஞர்கள் அவர் மண்ணுக்குள் போவதற்குள் அவரது 'கிரீன் கலாம்' லட்சியத்தை நிறைவேற்ற முனைந்தனர். யாரும் சொல்லாமலேயே தானாக முன்வந்து தமிழகம் முழுவது தங்கள் வீடு, தோட்டம், அலுவலகம், பொது இடங்கள் என கிடைத்த இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஆவணம் கிராமத்தில் ஒன்றிணைந்த இளைஞர்கள் 'கிரீன் கலாம்' 'கிரீன் விவேக்' என்ற புதிய திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிட்டு முதல்கட்டமாக சமூக ஆர்வலர் அப்பாஸ் தலைமையிலான இளைஞர்கள் சுமார் 350 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் கார், வேன், ஓட்டுநர்கள் விவேக் நினைவாக மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினார்கள். கொத்தமங்கலத்தில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். புதுக்கோட்டையில் பெண்கள் குழந்தைகளும் மரக்கன்றுகளை நட்டனர்.

 

 House to house saplings ... Young people fulfilling Vivek's ambition!

 

இந்த ஒரே நாளிலேயே விவேக் லட்சியத்தின் பாதியை கடந்துவிட்டனர். இன்னும் சில நாட்களில் அவரது 'கிரீன் கலாம்' திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு 'கிரீன் விவேக்' திட்டமும் நிறைவேற்றப்படும். விவேக் உயிரோடு இருக்கும்போது அடையமுடியாத லட்சியத்தை அவரது ரசிகர்கள், அவரால் கவரப்பட்ட இளைஞர்கள் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.