வேலூர் பில்டர்பெட் சாலையில் அரசு ஆதிதிராவிடர் நல மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதி வழியாக மார்ச் 2ந்தேதி இரவு சென்றவர்கள் ஒருநிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்ல வேண்டியதாக இருந்தது. காரணம் இரண்டு மாணவிகள் வெளியே நின்றுக்கொண்டு இருந்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் 6 பேராக நின்றுக்கொண்டு இருந்தனர். அவர்களின் அருகே பேக், துணி பைகள் போன்றவை இருந்தன.
இதுப்பற்றி செய்தியாளர்களுக்கு தகவல் சொல்ல அதன்பின் சென்று அவர்களிடம் விசாரித்துள்ளனர். முதுகலை படித்துவரும் திருவண்ணாமலை மற்றும் செங்கத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள், வார விடுமுறை முடிந்து மார்ச் 2ந்தேதி மாலை விடுதிக்கு வந்துள்ளனர். அப்படி வந்த அந்த இரண்டு மாணவிகளை விடுதிக்குள் அனுமதிக்காமல் விரட்டியுள்ளார் விடுதியை கவனித்துக்கொள்ளும் வார்டன்.
சாப்பாட்டில் புழு, பூச்சி உள்ளது, இதனால் சாப்பாடு சாப்பிட முடியவில்லை என சிலர் ஹோட்டலில் வாங்கி வந்து சாப்பிடுகிறார்கள், எங்களுக்கு வசதியில்லை. அதனால் சாப்பாட்டு சரி செய்யுங்கள் எனக்கேட்டு சில வாரங்களாக கேள்வி எழுப்பினோம். அதற்கு பழி வாங்கும் விதமாக விடுதிக்கு தாமதமாக வந்தீர்கள் எனச்சொல்லி எங்களை வெளியே நிறுத்திவிட்டார்கள்.
இந்த விடுதியில் பாத்ரூம் கழுவுவது, சமைப்பது, விடுதியை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை நாங்களே தான் செய்கிறோம். இங்கு 95 மாணவிகள் தங்கி கல்லூரி படிப்பதாக ரெக்கார்ட் உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உண்மையில் நாங்கள் இங்கு 49 பேர் மட்டும்மே தங்கி படித்துவருகிறோம் என்கிறார்கள்.
இதுப்பற்றி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.