தமிழகத்தில் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வியாபாரிகள் விநியோகம் செய்துவருகின்றனர்.
தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி மாலை 06.00 மணிவரை மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளுடன் வாகனங்களில் மளிகைப் பொருட்களும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. ஆன்லைன், தொலைபேசி ஆகியவை மூலம் வாடிக்கையாளர் கேட்கும் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் வாகனங்கள், தள்ளுவண்டிகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, 'சென்னையில் 2,197 வாகனங்களில் மளிகைப் பொருட்கள் விற்பனைத் தொடங்கியுள்ளது. சென்னையில் 7,000 வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.