![ay111](http://image.nakkheeran.in/cdn/farfuture/BLGN1y0TmjqLnKw-eGfWpsd-E6Fv8efz1qjwFWZs0l4/1533347640/sites/default/files/inline-images/ayanavarram111.jpg)
சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மென்ட்டில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 17 பேருக்கும் சென்னை மகிளா நீதிமன்றம் 15நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நீதிமன்ற வளாகம் பல நாட்களுக்கு பின்னர் பதற்றமான நிலைக்கும் சென்று திரும்பி இருக்கிறது.
12 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தனியார் அபார்ட்மெண்டில் பணியாற்றி வந்த 17பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு 307,506(II) மற்றும் போக்ஸோ சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை எழும்பூர் மாஜிஸ்ட்ரேட் சரிதா முன்பு 17பேரும் ஆஜர்படுத்தப்பட இருக்கவே, பதிவு செய்யபட்ட சட்டதின் படி பதிவு செய்து இருப்பதால் மூன்று ஆண்டுகள் தொடங்கி 10 ஆண்டுகள் வரையும், ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை கொடுக்கப்படும் என்பதால் தான் விசாரிக்க முடியாது என்பதால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் காலை 11.10 மணி அளவில் 17 பேரும் கொண்டு வரப்பட்டனர்.
17 பேர் என்பதால் உடனடியாக விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாஜிஸ்ட்ரேட்டிடம் முக்கிய இடங்களில் கையெழுத்து பெறப்படாததால் அதற்கு தாமதமானது. அது வரை 17 பேரும் மகிளா நீதிமன்றத்தின் வெளியில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மதியம் 1.20 மணி அளவில் அனைவரும் உள்ளே கொண்டு செல்லப்பட்டு நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர் . அப்போது கீழ்பாக்கம் ஏசி சீராஜூதின் உள்ளே அழைக்கப்பட்டார். அதன் பின்னர் வழக்கு குறித்து விவரங்களை நீதிபதி முன்னர் தெரிவித்த பிறகு ஒவ்வொரின் பெயரையும் நீதிபதி உறுதி செய்தார். போலீசார் அடித்தார்களா என்று நீதிபதி கேட்டுள்ளார்.
அதன் பின்னர் ஜூலை 31 ஆம் தேதி(15 நாட்கள்) வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அனைத்து விதமான நடைமுறைகளும் முடிக்கப் படவே 3.30 மணி நெருங்கியது. அதன் முன்னர் மகிளா நீதிமன்றம் முன்னர் வழக்கறிஞர்கள் குவிந்து கிடந்தனர். அதிக அளவில் போலீசார் முன்னர் குவிக்கப்பட்டனர். ஆனால் கூட்டம் அதிகரிக்கவே உயர் நீதிமன்ற துணை ஆணையர் சுந்தர வடிவேல் நீதிமன்றம் சுற்றி பாதுகாப்பை உறுதி செய்யவே மீண்டும் அதிக அளவில் போலீஸ் குவிக்கபட்டனர். அதன் பின்னர் சிறப்பு நடவடிக்கை குழு (SAG) அழைத்து வரப்பட்டனர். சரியாக 3.30 மணி அளவில் 17 பேரில் முகங்களும் மறைக்கப்பட்டு நீதிமன்ற அறையின் வெளியில் அழைத்து வரப்பட்டனர்.
எப்போதும் அழைத்து வரப்படும் வழி இல்லாமல் மாற்றுப்பாதையில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரவே படிக்கட்டுகளில் பெண் காவலர்கள் பாதுகாப்புக்கு நிற்கவைக்கப்பட்டிருந்தனர். அதில் 26 வயது ஜெயராமன் என்பவரை முதலிலும் அதன் பின்னர் மற்றவர்களும் அழைத்து வரவே மூன்றாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடி அழைத்து வரப்படவே படிகளில் காத்திருந்த வழக்கறிஞர்கள் முதலில் வந்த ஜெயராமனை சரமாரியாக அடிக்க தொடங்கினர். தொடர்ந்து அவனையும் அதன் பின்னர் வந்த மூவரின் மீதும் கோபத்தை காட்டினார். ஜெயராமனை கீழே இழுத்து போட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் கண்மூடிதனமாக தாக்கவே “ அய்யோ அம்மா “ என்று கத்தவே மொத்த நீதிமன்றமும் அதிர்ந்தது.
அனைத்து வழக்கறிஞர்களும் சம்பவ இடம் நோக்கி வரவே 17 பேரை இரண்டு பிரிவுகளாக பிரித்து சிபிஐ நீதிமன்றத்தில் பாதி பேரும் மகிளா நீதிமன்றத்தில் பாதி பேரும் பிரித்து வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீ-யாக பரவவே மொத்த கூட்டமும் அந்த பகுதியில் சூழ்ந்து கொண்டனர்.
சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்து விடும் என்று காத்திருக்கவே கூட்டம் கலையாமல் அப்படியே இருக்கவே பொறுத்திருந்து பார்த்த ஜெ.சி அன்பு, கூடுதல் ஆணையர் ஜெயராமன், கீழ்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன், மாதவரம் துணை ஆணையர் கலைசெல்வன் ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வழிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டு இருந்தது.
இறுதியாக 7.45 மணி அளவில் வெளியில் போலீஸ் குவிக்கப்பட்டு சிறப்பு நடவடிக்கை குழு அதிகாரிகள் சுற்றி நிற்கவே உயர் அதிகாரிகள் முன்னிலையில் முகங்கள் மறைக்கப்பட்டு வண்டியில் ஏற்றபட்டனர். அப்போது அங்கு இருந்த சில வழக்கறிஞர்கள் வண்டியை அடிக்கவே போலீஸ் சூழ்ந்து கொண்டனர். அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வண்டியின் சாவியை எடுக்க உள்ளே விழுந்ததால் உடனடியாக ஓட்டுனர் சாவியை எடுத்து வண்டி பறந்தது. கீழ்பக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லபட்ட 17பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
12 வயது சிறுமியை 17 பேர் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டதால் பல நாட்களுக்கு பின்னர் உயர்நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.