Skip to main content

சசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தம் அரசு உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

High Court quashes government order to acquire Sasikala's land

 

சாலை விரிவாக்க பணிகளுக்காக வி.கே.சசிகலாவின் நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம், பனையூரில் சசிகலாவுக்குச் சொந்தமான தோப்பு மற்றும் பழத்தோட்டம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியான 784 சதுர மீட்டர் அளவு நிலத்தைச் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தக் கடந்த 2010ம் ஆண்டு சிறப்பு வட்டாட்சியர் நடவடிக்கையை மேற்கொண்டார். இதை எதிர்த்துக் கடந்த 2011ம் ஆண்டு சசிகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சாலை விரிவாக்க திட்டத்திற்கு அந்த நிலம் அவசியமானது என்றும், வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக நிலம் கையகப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

சசிகலா தரப்பில் நில இழப்பீடு வழங்குவது தொடர்பாக எந்த ஒரு நோட்டீசும் தனக்கு வரவில்லை என்றும், அது தொடர்பான கூட்டத்தில் தானோ, தனது பிரதிநிதியோ பங்கேற்கவில்லை என்றும் எனவே நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி இளந்திரையன், சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவின் நிலத்தின் ஒரு பகுதியைக் கையகப்படுத்தும் அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்