திண்டுக்கல் மாநகராட்சி மேயராக 23வது வார்டில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இளமதி, மேயர் வேட்பாளர் என திமுக தலைமை அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை இளமதி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சுப்பிரமணியனிடம் மேயர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில், இளமதி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராகியுள்ளார்.
இதனையடுத்து மேயருக்கான கவுன் அணிந்து, 101 பவுன் தங்கச் செயின் அணிந்து வந்தார். இவரை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அழைத்துவந்து மேயர் இருக்கையில் அமர வைத்து செங்கோல் வழங்கினார்கள்.
இதில் திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் 42 பேர் கலந்து கொண்டனர். வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 5 மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. 45வது வார்டு அதிமுக உறுப்பினர் அமோலற்பமேரி மட்டும் வந்துவிட்டு திரும்பி சென்றார்.