Skip to main content

"அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19/12/2021) சென்னையில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14- ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேரூரையாற்றினார். 

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம், அவர்கள் இல்லையேல் அரசாங்கம் இல்லை. தி.மு.க. ஆட்சி அமைத்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்குத் துணையாக நிற்கும். தான் அதிகம் பேசமாட்டேன்; செயலில்தான் காட்டுவேன். கடும் நிதி நெருக்கடி இருந்த போதிலும் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தியுள்ளோம். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் படிப்படியாக, நிச்சயமாக நிறைவேற்றப்படும். மழை வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டிய மத்திய அரசு இன்னும் தரவில்லை. ஜிஎஸ்டி வரியிலும் தமிழ்நாட்டிற்கான தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. கொத்தடிமை போலத்தான் மத்திய அரசிடமிருந்து மாநிலங்கள் நிதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன" எனத் தெரிவித்தார். 

 

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, சி.ஐ.டி.யூ. மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்