Skip to main content

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு திறக்கப்படத அரசு கட்டிடங்கள் !!

Published on 25/06/2018 | Edited on 26/06/2018

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற தொகுதி என்றாலே அது காங்கிரஸ் கோட்டையாக தான் இருந்து வந்தது.  அந்த அளவிற்கு இந்த தொகுதியின் முன்னாள் சட்டமன்ற மன்ற உறுப்பினரான ஆண்டிஅம்பலம் தொடந்து ஏழு முறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில் தான் திடீரென ஆண்டிஅம்பலம் உடல் நலக் குறைவால் இறந்ததினால் நடந்த இடைத்தேர்தலில்  தான் அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் முன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதை தொடந்து நான்கு முறை நத்தம் சட்டமன்ற உறுப்பினராகவும் மந்திரியாகவும் வந்த நத்தம் விஸ்வநாதன் தன் தொகுதிக்கு தேவைக்கான அனைத்து  அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்து நத்தம் தொகுதியை அதிமுக கோட்டையாக உருவாக்கிவிட்டார் விஸ்வநாதன்.

 

 

 

இந்தநிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ஜெ வுக்கும் விஸ்வநாதனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதின் மூலம் மீண்டும் நத்தம் தொகுதியை விஸ்வநாதனுக்கு ஒதுக்காமல்  அவருடைய ஆதரவாளரான ஷாஜகானுக்கு கொடுத்து விட்டு விஸ்வநாதனுக்கு ஆத்தூர் தொகுதியை ஒதுக்கி விட்டார். இதனால் அவர் மனம் நொந்து  போய்விட்டார். அப்படி இருந்தும் முன்னாள் அமைச்சர்  ஐ.பி.யை எதிர்த்து ஆத்தூர் தொகுதியில் போட்டி போட்டும் கூட தோல்வி அடைந்தார்.  ஆனால் மீண்டும்  இத்தொகுதியில் போட்டி போடுவோம் என்ற  நோக்கத்திலும். தொகுதிவளர்ச்சிக்காகவும் முப்பெரும்  துறை அமைச்சராக இருந்த விஸ்வநாதன்    நத்தம் தொகுதியில் இருக்கும். சாணார்பட்டி  யூனியனியன்களில் 16  சமுதாய கூடங்களும். நத்தத்தில் கோர்ட்டும். சாணார்பட்டியில் விவசாயிகளுக்கான விற்பனை கூடம் இப்படி தொகுதி மக்களின் நலனுக்காக பலகட்டிங்களை கட்டி இருக்கிறார். அப்படி இருந்தும் கட்டிய கட்டிடங்களை திறக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிங்கள் பழுதடைந்து வருவதுடன்மட்டும்மல்லாமல் கட்டிடங்களை சுற்றி புல்புதர்கள் முளைத்து சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது.

 

 

 இதுபற்றி புதிய கட்டிடங்கள் கட்டிய காண்ட்ராக்ட்காரர்கள் சிலரிடம் கேட்ட போது...தொகுதிமக்களின் வசதிக்காகதான் பெரும்பாலான ஊர்களில் சமுதாய  கூடங்களை(திருமண மண்டபம் )முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் விஸ்வநாதன் கட்டசொல்லி தனது நிதியையும், பொதுநிதியும் போட்டுக்கட்ட சொன்னார்.  அதன் அடிப்படையில்தான் சமுதாய கூடங்களும் மற்றும் கோர்ட் உள்பட பல கட்டிடங்களை கட்டினோம். ஆனால் தற்பொழுது  இத்தொகுதியை  திமுக கைபற்றி ஆண்டிஅம்பலம் மகன் எம்.எல்.ஏ.வாக வந்து விட்டதால் இது திமுக தொகுதி எனவே கட்டிடங்களுக்கு தொகை பாக்கி எல்லாம் தரமுடியாது என அதிகாரிகள் வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள். இதனால்தான் கட்டிங்களின் பணிகள் முடிந்து ஒரு வருடத்திற்குமேல் ஆகியும் மீத பணம் தராததால் நாங்களும் கட்டிங்களின் சாவியை கொடுக்க வில்லை இதனால் எங்க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் வேலை பணிகள் முடிந்தும் திறக்காமலே கிடப்பதின் மூலம் தொகுதி மக்களும் பயன் அடையாமல் இருக்கிறார்கள். அதுவும்  அதிமுக ஆட்சி நடந்தும் கூட  அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட  கட்டிடங்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்து அடிப்பதை பார்க்கும்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியல் தலையீடு மூலம் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிகிறது என்று  கூறினார்கள். ஆக தொகுதி வளர்ச்சிக்காக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டு இருப்பதின் மூலம் மக்களின் வரி பணமும் வீணாகி ஊர் ஊருக்கு இருக்க கூடிய  சமுதாய  கூடங்கள் சமுக விரோதிகளின்  கூடாரமாகவும் மாறிவருகிறது என்பது தான் உண்மை.

சார்ந்த செய்திகள்