Skip to main content

அரசு வழக்கறிஞர்கள் 48 பேர் நியமனம்! -தமிழக அரசு ஆணை வெளியீடு!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் ஆஜராக 48 புதிய அரசு வக்கீல்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு சார்பில் ஆஜராக அட்வகேட் ஜெனரல், 11 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர்,  சிறப்பு அரசு பிளீடர்கள், கூடுதல் அரசு பிளீடர்கள், அரசு வக்கீல்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 Government appoints 48 lawyers Tamilnadu Government Order Released!


இந்நிலையில், வழக்கின் பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு மேலும் அரசு வக்கீல்களை நியமிக்க அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் அரசுக்குப் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில்,  மேலும் 48 அரசு வக்கீல்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதில் ஏற்கனவே கூடுதல் அரசு பிளீடர்களாக ஆஜராகி வந்த இ.மனோகரன், எஸ்.வி.விஜய்பிரசாந்த் உள்ளிட்ட 8 பேர் சிறப்பு அரசு பிளீடர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வக்கீல்கள் எம்.பெருமாள், கே.ஜே.செல்வகுமார், பி.வி.செல்வகுமார் உள்ளிட்ட 24 கூடுதல் அரசு பிளீடர்கள் இடம் பெற்றுள்ளனர். அன்னை எழில், பி.டி.அன்பரசன் உள்ளிட்ட 15 அரசு வக்கீல்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அரசாணையை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்