Skip to main content

நீர் வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க மீண்டும் தடை!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால், பரிசல்கள் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
 

hogenakkal

 

 

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பருவமழைப் பொழிவு அதிகரித்துள்ளது. அதேபோல் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளிலும் கடந்த இரு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 14784 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

மேலும், ஒகேனக்கல் காவிரியிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவிகளில் குளிப்பதற்கும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
 

 

சார்ந்த செய்திகள்