Published on 29/03/2019 | Edited on 29/03/2019
வரும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

குக்கர் சின்னத்தை டிடிவி தினகரன் பெற முயன்ற நிலையில் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.தற்போது பரிசு பெட்டி சின்னம் கிடைத்துள்ளது.
பரிசு பெட்டி சின்னத்தை மக்களிடம் தெரிவித்து தேர்தலில் வெற்றி பெறுவோம் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.