போலீசாரின் வாகன சோதனையின்போது தான் குடிபோதையில் இல்லை, தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்றை நிறுத்தினர். அந்த காரில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், போலீசாரின் விசாரணையில் காயத்ரி ரகுராம் குடிபோதையில் இருந்ததை ஒப்புக் கொண்டதால் 3500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, பின்னர் காயத்ரியை கார் ஓட்ட அனுமதிக்காத போலீசார், போக்குவரத்து காவலரை டிரைவராக வாகனத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், என்ன நடந்தது என்று என் அம்மா மற்றும் என்னுடன் இருந்தவர்களுக்கு தெரியும். போலீஸ் யாரும் என்னை வீட்டுக்கு வந்து இறக்கிவிடவில்லை. இதனை எங்க அம்மாவே சொல்லுவாங்க என்றார்.
அப்போ காயத்ரி ரகுராம் தாயார், காயத்ரி ரகுராம் இதுபோன்று பண்ணமாட்டார். யாரோ வேண்டுமென்றே பின்தொடர்ந்து பழிவாங்குகிறார்கள். நல்லாவே இருக்க மாட்டார்கள். கடவுள் தண்டிப்பார். காயத்ரியின் அப்பாவும் தண்டிப்பார் என்றார்.
தொடர்ந்து பேசிய காயத்ரி ரகுராம், நான் குடிச்சேன் என்றால் குடிச்சேன் என்று சொல்லப்போகிறேன். இதில் என்ன எனக்கு பயம் இருக்கிறது. பாஜகவில் இருப்பவர்களில் பலருக்கு என்னை பிடிக்காது. நான் சக்ஸஸ்ஸாக ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்கேன்னு என்னை பிடிக்காது. நிறைய பேர் பொறாமையில் இருக்கிறார்கள். நீங்க எல்லோரும வளர்ந்து வாங்க நான் சந்தோஷப்படுவேன். இன்னொருத்தர் முதுகில் குத்தாதீங்க. அந்த வீடியோவில் நான் குடிச்சமாதிரியும் இல்லை. காரில் இருந்த மாதிரியும் இல்லை. ஆனால் அந்த காரில் நான் இருந்தேன். பொய் சொல்றது எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார்.
— Gayathri Raguramm (@gayathriraguram) November 26, 2018