
சிதம்பரம் - சீர்காழி செல்லும் சாலையில் அரசு தொழிற்பயிற்சி கூடம் இயங்கி வருகிறது. இதில் பயிலும் சில மாணவர்களை குறிவைத்த கஞ்சா கும்பல் அவர்களிடம் கஞ்சாவை கொடுத்து விற்பனை செய்ய கூறியுள்ளனர். இதில் 2 மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் ஒரு மாணவர் கஞ்சாவை விற்காமல் வந்ததும் அந்த கஞ்சா கும்பலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கஞ்சா கும்பல் 2 மாணவர்களையும் சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் ரூம் போட்டு அங்க வரவழைத்து மாணவர்களை ஏன் கஞ்சா விற்கவில்லை என கடுமையாக தாக்கியும் விற்ற கஞ்சாவின் பணம் ஏன் கொடுக்கவில்லை என மிரட்டி 2 மாணவர்களை கஞ்சா ஆசாமிகள் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரபல கஞ்சா வியாபாரி ஒடப்பு சிவா என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு மாணவனை தாக்கிய வினோத்குமார் என்பவரும் சிறையில் உள்ள நிலையில் மாணவர்களை தாக்கும் காட்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்ட முக்கிய குற்றவாளியான விமல்ராஜ் என்பவனை அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமலான காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மாணவர்களை கஞ்சா ஏன் விற்க வில்லை என தாக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.