காந்திகிராமத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் வந்து இறங்கும் ஹெலிபேட் பகுதியை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் விசாகன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், எம்.பி. வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், மாவட்ட கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், ஆகியோர் ஹெலிபேட் தளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் பாதையையும், அவரை வரவேற்கும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.