நவம்பர் 16 கஜாவின் கோர தாண்டவத்தால் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வீடு, தோட்டம், அனைத்தையும் இழந்து வாழ்வாதாரம் இழந்து ஒரு வேலை சோற்றுக்காக கையேந்தி நிற்கும் அவல நிலை ஏற்பட்டது.
அப்போது உதவிக்கு வராத அரசாங்கம் புயல் தாக்கி ஒரு வாரத்திற்குள் கொடுக்க வேண்டிய நிவாரணங்களை 50 நாட்களுக்கு பிறகு கொடுத்து வருகிறது. அதிலும் ஊருக்கு 50 சதவீதம் பேருக்கே நிவாரண பொருள் என்பதால் தினசரி போராட்டங்களும், சாலை மறியல்களும் நடந்து வருகிறது. தினமும் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டங்கள் நடப்பதால் அதனை தடுக்க போராடும் மக்கள் மீது வழக்கு போடும் யுத்தியை தொடங்கியுள்ளது தமிழக அரசும் காவல் துறையும்.
வழக்கு போட்டால் போராட்டங்கள் குறையும் என்ற காவல் துறையின் எண்ணம் பலிக்கவில்லை. அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அரசு அறிவித்த நிவாரணப் பொருளாக 27 பொருட்கள் இருப்பதாக அறிவித்தாலும் அதில் பல பொருட்கள் குறைகிறது. தார்பாய் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தான் ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் பழைய சேலைகள், கிழிந்த சேலைகள் வைக்கப்பட்டிருந்த்தை பார்த்து மக்கள் கொதிப்படைந்துள்ளது. எல்லாம் இழந்து நாகதியாக நிற்கும் எங்களை இந்த அரசாங்கம் கிழிந்த சேலைகளையும் கடல், ஆறுகளில் தோசம் கழித்து விடப்படும் பழைய சேலைகளையும் கொடுத்து கேவப்படுத்துகிறது. இந்த கேவல் எங்களுக்கு தேவையா என்று வினா எழுப்பியதுடன் சாலை ஓரங்களில் அந்த சேலைகளை வீசியும் சென்றுள்ளனர். இதனால்
கடந்த மாதம் கறம்பக்குடி பகுதியில் கொடுக்கப்பட்ட பால் பவுடர் காலாவதியானதான் அந்த பால் பவுடரை குடித்த 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அதனால் பால் பவுடரையே அந்த பகுதி மக்கள் பயன்படுத்தாலம் வீசி எரிந்தனர். தற்போது கிழிந்த, பழைய சேலைகள் கொடுப்பதால் அதையும் குப்பை க்கு கொண்டு வந்துவிட்டனர்.
நிவாரணம் என்ற பெயரில் கணக்கு காட்ட பழைய, காலாவதி பொருட்களை கொடுக்காமல் காலங்கடந்து கொடுக்கும் பொருட்களையாவது மக்கள் பயன்படுத்தும் பொருட்களாக கொடுத்தால் நல்லது.