Published on 06/01/2019 | Edited on 06/01/2019
![WEATHER](http://image.nakkheeran.in/cdn/farfuture/2ujhkUARf6eXCsGspk9k6Js5MBSwikZWmbrk0xRv09o/1546767450/sites/default/files/inline-images/0_9.jpg)
நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு உறைபனி நிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள பபுக் புயல் காரணமாக தமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த பபுக் புயலானது இன்று கரையை கடக்கும் போது காற்று அதிகம் வீசும் என்பதால் மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.