Skip to main content

சுவரேறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? விஜயதரணி காட்டம்

Published on 21/08/2019 | Edited on 22/08/2019

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு சென்றனர். அப்போது அவர்கள், ப.சிதம்பரத்தை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதரணி.


பல லட்சம் கோடியை ஏமாற்றி விட்டு தப்பி சென்ற விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்களை பிடிப்பதற்கு இந்த அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது?
 

இங்கிலாந்திலும், லண்டனிலும் எந்த சுவரை ஏறி குதித்தது இந்த அரசு. ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர். முன்னாள் மத்திய அமைச்சரை மரியாதை குறைவாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவிற்கு இவர்கள் செய்கிறார்கள் என்றால் இது அரசியல் காழ்புணர்ச்சிதான்.

 

Vijayadharani


 

சிபிஐ விசாரணைக்காக இங்கே இருக்கிறவர் அவர். வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் மனு வரப்போகிறது. அதற்குள் சுவர் ஏறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? 
 

காழிப்புணர்ச்சியை இவ்வளவு தீவிரமாக நிறைவேற்றக் கூடிய இடத்தில் இந்த அரசு இருக்கிறது. ஒரு வழக்கு இருக்கிறது என்றால் அரசாங்கம் சட்ட ரீதியாக அணுகி சட்டரீதியாக அதை அமல்படுத்த வேண்டுமே தவிர, அதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஒரு  நாடகமாக இதை கையாண்டுள்ளனர்.
 

P C


 

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பெரும்பான்மையில் வெற்றி பெற்ற அரசு என்ற எண்ணத்தில் இதுபோன்று செய்கிறார்கள். இதுபோன்ற செயல் அரசிற்கு பெரிய கெட்டப் பெயரைத்தான் ஏற்படுத்தும். அரசு ஒருவரை விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு சில நடைமுறைகள் இருக்கிறது. சட்டரீதியான அணுகுமுறை இருக்கிறது. அதை எல்லாம் சரியாக பின்பற்றி இதை செய்ய வேண்டும். அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். அதிகாரிகளே இப்படி செயல்படுவது மக்கள் மத்தியில் இது பெரிய கண்டனத்திற்கு உரியதாக உள்ளது.
 

இந்தியா முழுக்க பேசக்கூடிய ஒரு சம்பவமாக இது மாறிவிட்டது. இந்த வழக்கை தீவிரமாக நடத்த வேண்டும் என்று சொன்னவர்களுக்கே, இப்போது நடக்கின்ற சம்பவங்களை பார்த்து இவ்வளவு அராஜகமாக நடக்கிறதே என்று அவர் மீது இரக்கத்தை கூட உருவாக்கியுள்ளது. எதிரிகளுக்கு கூட அவர் மீது இரக்கம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம், ஜனநாயகம் எல்லாவற்றையும் மீறி நடத்தப்படுகின்ற இந்த விதத்தைப் பார்த்து அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.


 

சார்ந்த செய்திகள்