Skip to main content

"சமூக நீதியைச் சாத்தியமாக்கியவர் கலைஞர்"- நடிகர் கமல்ஹாசன் புகழாரம்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

former cm kalaignar karunanidhi birthday actor kamal hassan tweet


மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97- ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி, கனிமொழி எம்.பி, துரைமுருகன், கவிஞர் வைரமுத்து  உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 
 


இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக நீதியையும், வளர்ச்சியையும், தன்னால் இயன்ற வரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கலைஞர். பகுத்தறிவு எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டி பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டியவர்" என்று கலைஞருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்