Published on 15/04/2021 | Edited on 15/04/2021

மதுரை முதலைக்குளம் கண்மாயில் மீன்படி திருவிழா நடைபெற்றது. இதில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முதலைக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாத நிலையிலேயே இந்த மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு, வலைகள் மற்றும் துணிகளில் உற்சாகமாக மீன்களைப் பிடித்துச் சென்றனர்.