Skip to main content

வாழ்வாதாரம் கருதி வேலைநிறுத்தம் வாபஸ்; கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Fishermen called off strike for livelihood

 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக மாறியுள்ளது. இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை ஆயிரக்கணக்கான மீனவர்களை கைது செய்து தாக்கியதில் பலர் காயமடைந்தும் நூற்றுக்கணக்கான படகுகளை இழந்தும் நிர்கதியாய் நிற்கிறார்கள்.

 

இந்த நிலையில், இலங்கை கடற்படை அண்மையில் 5 படகுகளில் சென்ற 24 மீனவர்களையும், படகுகளையும் சிறைப்படுத்தி வைத்துள்ளது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து கடந்த 28ம் தேதி 92 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் 5 படகுகளில் சென்ற 24 மீனவர்களையும், படகுகளையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தத் தகவல் பரவியதும் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், 24 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததைக் கண்டித்து கடந்த 30ஆம் தேதி முதல் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வாழ்வாதாரம் கருதியும், அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதைத் தொடர்ந்தும் மீனவர்கள் இந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இதன் காரணமாக வழக்கம்போல் ஜெகதாப்பட்டினம்  மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்