Skip to main content

"தமிழ் மக்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்"!- ராகுல் காந்தி எம்.பி. பேட்டி... 

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

congress leader rahul gandhi press meet at madurai airport

தமிழ் மக்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன் என்று ராகுல் காந்தி எம்.பி. கூறியுள்ளார். 

 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., "அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு துன்புறுத்தல் விளைவிக்கக் கூடியது என முதலில் என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால் அதை நான் நேரில் பார்த்தபோது அதில் எந்த துன்புறுத்தலும் இல்லை என்பதை உணர்ந்தேன். ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்துக்கொண்டேன். 

 

கலாசாரங்கள் நசுக்கப்படுகின்றன; தமிழ் மொழியை நசுக்க முயற்சிகள் நடக்கின்றன. தமிழ் மக்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்; அதற்காக அவர்களுக்கு நன்றி. நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள்; மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும். டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை; அவர்களுக்கு எதிராக சதி செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கான பிரதமரா? தொழிலதிபர்களுக்கான பிரதமரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்