Skip to main content

யானை தாக்கி ரப்பர் தோட்ட பெண் தொழிலாளி உயிரிழப்பு

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

 Female rubber plantation worker lost their live after being attacked by an elephant

 

கன்னியாகுமரியில் வனப்பகுதியில் ரப்பர் பால் வடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி காட்டுயானை மிதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து யானைக் கூட்டம் அங்கு முகாமிட்டுள்ளதால் பெண்ணின் உடலை மீட்பதில் வனத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

கன்னியாகுமரியின் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தமிழக அரசு ரப்பர் கழகத்தின் சார்பில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. அதிகப்படியான தோட்டங்கள் அடர் வனப்பகுதியில் இருக்கும் நிலையில், சிலோன் காலனிக்கு அருகில் உள்ள வனத்தை ஒட்டியுள்ள ரப்பர் தோட்டத்தில் இன்று காலை ஞானவதி (57) என்ற பெண் தொழிலாளி அவரது கணவருடன் பால் எடுக்கச் சென்ற நிலையில், அங்கு கூட்டமாகச் சுற்றிக் கொண்டிருந்த காட்டு யானைகளில் ஒன்று ஞானவதியை மிதித்துக் கொன்றது.

 

இந்தச் சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆனபிறகும் காட்டு யானைகள் அதே பகுதியில் முகாமிட்டிருப்பதால் உயிரிழந்த பெண் தொழிலாளியின் உடலை மீட்க முடியாமல் வனத்துறையினர் போராடி வருகின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கையில் “சமீபகாலமாகவே அந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக அவர் உயிரிழந்த பகுதியில் ஒரு வாரக் காலமாக யானை நடமாட்டம் இருந்தது. இதை வனத்துறையினர் கண்காணிக்கத் தவறிவிட்டனர்” எனக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்