சிதம்பரம் பகுதியில் மழையை நம்பி நேரடி நெல்விதைப்பில் விவசாயிகள்
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டபகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானவரி(புஞ்சை) நிலங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பகல், இரவு நேரங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் நிலங்களில் ஈரபதம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் உழவு பணியை மேற்கொண்டு நேரடி நெல்விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் அருகே உள்ள வெள்ளகேட் பகுதியில் நெல்விதைப்பில் ஈடுபட்டுள்ள பாலசுப்பிரமணி என்ற விவசாயி கூறுகையில் கடந்த ஆண்டு இதே போல் மழை பெய்தது அப்போதும் நேரடி நெல்விதைப்பு செய்தோம் அதன் பிறகு பெய்த கடுமையான வெய்யிலின் காரணமாக வறட்சி ஏற்பட்டது. அதனால் இந்த பகுதியில் உள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களில் உள்ள அனைத்து பயிர்களும் கருகியது. இந்த ஆண்டும் விதைத்து இருக்கிறோம் என்ன ஆகுமோ தெரியவில்லை என வருத்ததுடன் கூறினார்.
-காளிதாஸ்