Published on 23/01/2025 | Edited on 23/01/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனிப்பிரிவு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருக்கோவிலூர், திருபாலப்பந்தல், ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுரோடு, மணலூர் பேட்டை, சங்கராபுரம், வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு ஆகிய 9 காவல் நிலையத்திற்கு உட்பட்ட தனிப்பிரிவு காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.