வேலூர் மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் அம்மன் மெடிக்கல் இயங்கி வந்தது. இதன் உரிமையாளரான மாறன் மருந்து விற்பனை செய்வதோடு நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு புகார் சென்றுள்ளது.பின்னர் இதுப்பற்றி சுகாதாரத்துறையினருக்கும் தகவல் சென்றுள்ளது, அவர்கள் அதனை பெரிதாக கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள். மீண்டும் இதுப்பற்றி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கூறியுள்ளனர்.
இந்த புகாரை வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு உறுதி செய்துக்கொண்டுள்ளார் மாவட்டர் ஆட்சியர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் சந்தோஷ் நேரடியாக மாம்பாக்கம் சென்று ஆய்வு செய்தனர். அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தி, ஊசி, ரத்தம் படிந்த காட்டன், மருந்து பாட்டில் ஆகியவை ரத்தம் தோய்ந்த நிலையில் இருந்ததை பறிமுதல் செய்தனர். மெடிக்கல் ஷாப் வைக்க அனுமதி பெற்றுக்கொண்டு, மருத்துவம் படித்தவரைப்போல் ஆங்கிலம் மருத்துவம் பார்த்த குற்றத்துக்காக மெடிக்கல் கடைக்கு சீல் வைத்ததோடு போலி மருத்துரான மாறனையும் கைது செய்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் போலி மருத்துவர்களை பிடிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்ததில் பல போலி மருத்துவர்கள் பிடிபட்டனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அவர்களுக்கு மாம்பாக்கம் பகுதியில் போலி மருத்துவர் உள்ளதாக சென்ற புகார் அடிப்படையில் கைது செய்ய வைத்துள்ளார். வருவாய்த்துறையினருக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின்படி குற்றம் நடக்கிறது என தெரியவந்தால், அவர்களே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என தெளிவுப்படுத்தினார். அதன் அடிப்படையிலேயே சுகாதாரத்துறை அதிகாரிகள் இல்லாமலயே வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.