Skip to main content

தேடித்தேடி கிழிக்கப்படும் அழகிரி போஸ்டர் 

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
az

 

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரால் நீக்கப்பட்டார். கலைஞர் மறைவுக்கு பின் தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்மென தனது சகோதரரும், திமுக தலைவருமான ஸ்டாலினுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஸ்டாலின் தரப்பில் அழகிரியின் கோரிக்கை கண்டுக்கொள்ளாத நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவில் பல்வேறு காரணங்களால் ஓரம்கட்டப்பட்டவர்களை அழகிரி அணி திரட்டுகிறார்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு சேர்ந்த சரவணன் என்பவரை அமைப்பாளராக அழகிரி நியமித்துள்ளார். அவர் செப்டம்பர் 3ந்தேதி இரவு அழகிரியை வாழ்த்தியும், ஊர்வலத்துக்கு வரவேண்டி திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டியிருந்தார். 

an

இது ஸ்டாலின் கோட்டை இங்கு எப்படி போஸ்டர் ஒட்டலாம் என நகரம் முழுவதிலுமுள்ள போஸ்டர்களை திமுக ந.செ கார்த்திவேல்மாறன் தரப்பு தேடித்தேடி சென்று கிழித்துவருகிறது. இது அழகிரி ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபற்றி அழகிரிக்கு தகவல் சொல்ல அவர் அவுங்களைப்பற்றிய தகவல்களை அனுப்புங்க என்று கூறினாராம். 

 

நாளை அழகிரி நடத்தும் ஊர்வலத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் இருந்து 10 வேன்களில் சென்னை செல்ல முடிவு செய்துள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அந்தத் திருமணத்தில் நானும் அண்ணன் அழகிரியும் மாப்பிள்ளை தோழர்கள்' - நினைவை பகிர்ந்த மு.க.ஸ்டாலின்

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

MK Stalin shared the memory!

 

முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக இருந்த சண்முகநாதனின் திருமணத்தில் தானும் அழகிரியும் மாப்பிள்ளை தோழர்களாக இருந்ததாக சண்முகநாதனுடனான நினைவுகளைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமண விழாவில் பகிர்ந்துகொண்டார்.

 

கலைஞரின் உதவியாளராக இருந்த சண்முகநாதனின் பேரன் அரவிந்த் ராஜ்-பிரியதர்சினியின் திருமண விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ''நான் இந்தப் புகழை அடைந்ததற்கு சண்முகநாதனும் காரணம். சண்முகநாதன் திருமணத்தில் நான் மட்டுமல்ல எனது அண்ணன் அழகிரி அவர்களும், குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அத்தனை பேரும் மாப்பிள்ளை தோழர்களாக இருந்து அந்த விழாவை நடத்தி வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவராக சண்முகநாதன் இருந்தார். அவரை யாரும் கலைஞரின் செயலாளர் என்று அழைக்க மாட்டோம். அப்படிப் பார்த்ததும் இல்லை. நான் எப்படி கலைஞரின் மகனோ அதேபோல்தான் அவரையும் மகனாகவே கலைஞர் பார்த்தார்'' என்றார்.

 

 

Next Story

"தவழ்ந்து வந்தவர்கள் உழைத்து வந்தவர்களை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது" - கே.எஸ்.அழகிரி பதிலடி

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

cvb

 

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக, அதிமுக தரப்பில் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நேற்று சேலத்தில் பிரச்சாரம் செய்த அவர் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். குறிப்பாக மக்களை பற்றி முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை என்றும், எதை செய்தாலும் முதல்வர் தன்னை விளம்பரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

 

மேலும் பேச்சின் உச்சகட்டமாக தமிழகத்தில் ஒரு பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, "தவழ்ந்து வந்தவர்கள் எல்லாம் உழைத்து வந்தவர்களை பார்த்து பொம்மை என்று சொல்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கிறது. முதல்வரை விமர்சிக்கும் முன் தான் இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.