Published on 10/04/2019 | Edited on 10/04/2019
கடலூரைச்சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளனர். அய்யப்பன் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வந்தார் அய்யப்பன். இவருக்கும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. வருகிற 11-ந் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடலூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, அய்யப்பன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்பட்டதால்தான் வீட்டியில் ரெய்டும், கட்சியிலிருந்து நீக்க உத்தரவும் என்றும் கூறப்படுகிறது.