Published on 24/11/2023 | Edited on 24/11/2023

தண்டவாள பராமரிப்பு காரணமாக ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில் 5 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோட்டில் இருந்து ரயில் நம்பர் (06412) தினமும் காலை 6 மணிக்கு கிளம்பி 11.50 மணிக்கு ஜோலார்பேட்டைக்கு சென்றடைகிறது. அதேபோல் ஜோலார்பேட்டையில் (06411) இருந்து ரயில் மதியம் 3.10 மணிக்கு கிளம்பி இரவு 8 மணிக்கு ஈரோடு வருகிறது. இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு காரணமாக நாளை முதல் வரும் 29ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இருவழிப்பாதை ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.