பெருந்துறை குன்னத்தூர் ரோடு, ஐஆர்டி மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோவுக்கு தீ வைத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் விஜயபாலன் உட்பட 3 பேரை பெருந்துறை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை அடுத்த பிரப் நகரில் குடியிருப்பவர் ரிசார்ட். இவர் பெருந்துறை ஐஆர்டி மருத்துவமனையின் முன்பு தனக்கு சொந்தமாக ஆட்டோவை கடந்த மூன்று வருடங்களாக வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேற்படி ஆட்டோ ஸ்டாண்டில் இதே போல எட்டு நபர்கள ஆட்டோ வைத்து ஓட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சிலேட்டர் நகரைச் சேர்ந்த மேத்யூ மற்றும் அவரது அண்ணன் மெல்வின் மற்றும் பிரப்நகரை சேர்ந்த விஜயபாலன் ஆகிய மூவரும் கடந்த திங்கட்கிழமை அன்று பயணிகள் ஆட்டோ ஒன்றைக் கொண்டு வந்து ஐ ஆர் டி ஸ்டாண்டுக்கு பக்கத்தில் நிறுத்தி பயணிகளுக்கு வாடகைக்கு ஓட்டியுள்ளார். ஏற்கனவே ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள எட்டு ஆட்டோக்களிலும் வரிசையாக பயணிகளை ஏற்றி வருவதாகவும்,அதனால் புது ஆட்டோவையும் வரிசையாக நிறுத்தி ஓட்டுமாறு ரிச்சர்டு கூறியுள்ளார். அதனால் கோபமடைந்த மூவரும் ரிச்சார்டின் ஆட்டோ மீது பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்தனர்.
இதனால் ஆட்டோ தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு வந்த புகாரையடுத்து விடுதலை சிறுத்தை பிரமுகர் விஜயபாலன் மற்றும் மெர்லின் அவரது அண்ணன் மேத்யூ ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேதம் அடைந்த ஆட்டோவின் அதன் மதிப்பு 1.5 லட்சம் ஆகும். வி.சி.க.நிர்வாகி கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது