Skip to main content

ஓடும் ரயிலில் பாய்ந்த இன்ஜினியர்... தீவிர விசாரணையில் போலீசார்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Engineer who jumped on a running train

 

நாகர்கோவில் அருகிலுள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (53) நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊர் அருகிலிருப்பதால் சந்தோஷ்குமார் தினமும் அங்கிருந்து யூனியன் அலுவலகத்திற்கு பைக்கில் வந்து செல்பவர். பின்பு கிராமங்களில் நடந்து வருகிற பணிகளை பைக்கில் சென்று ஆய்வு செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது.

 

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த சந்தோஷ்குமார் பின்னர் பரமேஸ்வரபுரம் ஏரியாவில் நடந்து வரும் யூனியன் பணியினை ஆய்வு செய்யும் பொருட்டு பைக்கில் சென்றார். அது சமயம் அவர் காவல்கிணறு வழியாக வந்த போது பைக்கை ஒரமாக நிறுத்திவிட்டு காலை 10.30 மணிவாக்கில் அந்த வழியாக வந்த திருவனந்தபுரம் ரயில் முன்பு திடீரென்று பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதில் இன்ஜினியரின் உடல் இரண்டு துண்டானது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு உடற் கூறு ஆய்விற்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குடும்பப் பிரச்சனை காரணமா? பணி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் இது குறித்து வெளி வரும் வட்டாரத் தகவல்கள், சந்தோஷ்குமார், அ.தி.மு.க. அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானவர். யூனியனின் எந்த ஒரு காண்ட்ராக்ட்டும் அந்தப் புள்ளிகளின் மூலமாகவே நடந்து வருமாம். அவரே அதற்கான தொகையைப் பெற்று விடுவாராம். ஒரு சில பணிகள் மற்றும் கஸ்தூரிரெங்கபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி சுற்றுச் சுவர் பணியும் சரிவர நடக்கவில்லையாம். இது குறித்து கலெக்டர் விஷ்ணுவிடம் புகார் அளிக்கப்பட்டு அது லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை வரை போன நிலையில் தான் இதற்குப் பயந்து தற்கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை போகிறது என்கிறார்கள்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்