ஆனைகட்டி தூமனூர் மலை கிராமம் காட்டுசாலை பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (58). நேற்று இரவு ஒற்றை காட்டு யானை ஒன்று உணவு தேடி பெருமாள் வீட்டுக்கு வர அங்கு வாசலில் போடப்பட்டுருந்த சிமென்ட் ஷீட் மற்றும் ஓடுகளை உணவுக்காக தள்ளியதில் சேதம் அடைந்தது.
யானை இருக்கும் தகவல் தெரிந்து ஊர் மக்கள் பெருமாள் வீட்டிற்கு விரைந்து வந்து ஒற்றை யானையை விரட்டினர். பெருமாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் ஊர் மக்கள் காப்பாற்றினர். மேலும் யானையை காட்டினுள் விரட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை உள்ளது. மேலும் பல இடங்களிள் காட்டுத் தீ பிடித்து பல ஏக்கர் வனப்பகுதி தீயில் சேதம் அடைந்துள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் மக்கள் வசிப்பிடம் தேடி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.