Skip to main content

எட்டுவழிச்சாலையால் விவசாயத்திற்கு பாதிப்பு இல்லையாம்! எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்!!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

எட்டுவழிச்சாலைத் திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

eps


 

அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக சொந்த ஊரான சேத்திற்கு விமானம் மூலம் திங்கள்கிழமை (மே 20) வந்தார். அப்போது அவர் மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு, ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பான வினாக்களுக்கு பதில் அளித்தார். பின்னர் அவரிடம் எட்டுவழிச்சாலைத் திட்டம் தொடர்பாகவும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: 


விவசாயிகள் பாதிக்கப்படும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றாது. அதேநேரம், எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. சாலைகள் இல்லாமல் எப்படி நாம் பணிப்பது? தொழில்வளம் பெருகவும், சாலை விபத்துகளை தடுக்கவும் தரமான சாலைகள் அவசியம். வாகனங்களின் எண்ணிக்கை 300 மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது இந்த திட்டத்தை தொடங்கினால்தான், 5 ஆண்டுகளில் சாலைப்பணிகளை முடிக்கமுடியும். அதற்குள் மேலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 


திமுக ஆட்சிக்காலத்தில்கூட 756 கி.மீ. தூரத்திற்கு சாலைகள் போட்டுள்ளனர். அப்போதும் சாலை விரிவாக்கத்திற்காக நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எட்டுவழிசா¢சாலைத் திட்டத்திற்கு மொத்தமே 7 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஊடகங்கள்தான் பரபரப்பு செய்திகள் வேண்டும் என்பதற்காக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றன. 

 

மனிதர்கள் நினைத்தால் உருவாக்க முடியாதது எதுவும் இல்லை. ஆனால் உயிர் போனால் வராது. ஆகையால் சாலை விபத்தை தவிர்க்க வேண்டும் என்பதாலும், இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும்தான் எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படுகிறது. 


பருவமழை பொய்த்த காரணத்தால் இன்றைக்கு பல்வேறு பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சியை சமாளிக்க, தேர்தலுக்கு முன்பாகவே அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளோம். மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்யவும், அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்