Skip to main content

ஈழப் பெண் அகதி கைது...!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Eelam girl refugee arrested ...!


இலங்கையில் தொடர்ந்து நடந்த யுத்தத்தில், கடந்த நாற்பது - ஐம்பது ஆண்டு காலமாக ஈழ மக்கள் ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் அகதிகளாக இருந்துவருகின்றனர். இவர்களை கண்காணிப்பதற்கென்றே தமிழகம் முழுவதும் கியூ பிரிவு போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.

 

இலங்கை தமிழர் முகாமில் அவ்வப்போது சென்று சோதனை செய்வது கியூ பிரிவு போலீசாரின் வழக்கம். இதைப்போல் சந்தேகப்படும் நபர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து வருவார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஒரு சிலர் போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். 


அதேபோல், ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமிலும் கியூ பிரிவு போலீசார் விசாரனை செய்தனர். அதில் அங்கு தங்கியிருந்த பிரதீபா (36 வயது)  என்ற  இளம்பெண்ணின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அப்போது அவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக தெரியவந்ததுள்ளது. போலி அடையாள அட்டையும் சில ரசீதுகளும் அவர் வைத்திருந்திருந்துள்ளார். இதையடுத்து, அந்த இளம் பெண்ணை இன்று கைது செய்த போலீசார், அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்