Skip to main content

வாராக்கடனில் (NPA) கல்விக்கடன் இணைப்பு ! பேச மறுக்கும் கட்சிகள் !

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

இந்தியாவில் ஏழை , எளிய மாணவர்கள் தரமான உயர்கல்வியை பெறும் வகையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் "கல்விக்கடன்" (Education Loan) கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மத்திய நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டுக்கும் பல லட்சம் மாணவர்கள் உயர்கல்வியான (பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு ,வெளிநாடுகளுக்கு சென்று படித்தல்) பயில இந்திய வங்கிகளின் மூலம் கல்வி கடனை பெற்று படித்து வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு பல்லாயிரம் கோடியை கல்விக்கடனுக்கு வழங்குகிறது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்.  

பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை ! 

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் , பாலிடெக்னிக் மற்றும் மற்ற படிப்புகள் படித்து முடித்த மாணவர்களில் 50% மேற்பட்டோர் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் வங்கியில் கல்வி கடனை பெற்று படித்தவர்கள் ஆவர். படிப்பை முடித்த பிறகு கல்வி கடனைக்கட்ட இயலாதவர்களுக்கு சமந்தப்பட்ட வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கின்றனர். 

 

bank



வாராக்கடனில் (Non- Performing Asset) கல்வி கடனை இணைக்கும் வங்கிகள் !

வாராக்கடன் என்றால் என்ன ? என்பது இந்தியாவில் உள்ள பெரும்பாலானோருக்கு தெரியாது ! 

இந்தியாவில் வாராக்கடன் தொடர்பாக மாநில உயர்நீதிமன்றங்கள் , உச்சநீதிமன்றம் , மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகின்றனர். வாராக்கடன் என்பது தொழில் தொடங்க  வங்கியிடம் கடன் வாங்கி பின்பு அந்த கடன் தொகையை ஒவ்வொரு மாதமும் வட்டி மற்றும் அசலுடன் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். 

 

bank



ஒர் குறிப்பிட்ட மாதத்திற்கு வட்டி மற்றும் அசல் தொகையை வங்கியிடம் செலுத்தாத பட்சத்தில் தனக்கென்று ஏற்கெனவே உள்ள கணக்கை வாராக்கடனில் இணைத்து விடுவார்கள். இதை வங்கி பொது மேலாளர் மட்டுமே செய்வார். பின்னர் வாராக்கடனில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது என சமந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் மூலம் வங்கி மேலாளர் தகவல் தெரிவிப்பார். சமந்தப்பட்ட நபர் வங்கி மேலாளரை சந்தித்து கட்ட வேண்டிய தொகையை உடனடியாக செலுத்தினால் அந்த வாராக்கடன் பட்டியலில் இருந்து சமந்தப்பட்ட நபரின் பெயரை நீக்குவார் . ஒரு வேளை கடன் பெற்ற நபர் வங்கி மேலாளரை சந்திக்கவில்லை எனில் இரண்டாவது முறையாக நீதிமன்ற நோட்டீஸ் அனுப்புவார்.அதில் கடன் பெற்ற நபர் கடிதத்தில் குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மேலும் மூன்று முறை நீதிமன்றத்தில் சமந்தப்பட்ட நபர் ஆஜராக தவறினால் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நீதிமன்ற நீதிபதி உத்தரவிடுவார். இதன் பின்பு நீதிமன்ற ஆணையை பயன்படுத்தி வங்கி அதிகாரிகள் சமந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வார்கள்.

 

bank



இந்த முறையே வாராக்கடன் (NPA) ஆகும். இந்த வாராக்கடனில் தான் மாணவர்கள்  தங்கள் பெற்ற கல்வி கடனை கட்ட இயலாத இளைஞர்களை வங்கிகள் வாராக்கடன் சட்டத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தில் அலைய விடுகிறது. இதனால் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோடி கோடியாய் கடன் பெற்றுக்கொண்டு வங்கிகளை ஏமாற்றி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் தொழிலதிபர்கள் . ஆனால் லட்சக்கணக்கில் மட்டும் கல்வி கடனை பெற்று படித்த இளைஞர்கள் நீதிமன்ற வாசலில் உள்ளனர். இதனால் இளைஞர்கள் சிலர் தவறான முடிவுக்கு செல்லவும் வாய்ப்பு உண்டு என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத இந்த கல்வி கடன்  வாராக்கடனில் இணைப்பு தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.  இது குறித்து மாநில மற்றும் தேசிய கட்சிகள் பேச மறுக்கிறது மற்றும் இது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதை மறுக்கும் கட்சிகள் என்பது தற்போது தெளிவாக தெரிக்கிறது. இந்தியாவில் இயங்கும் வங்கிகளின் இந்த அடக்குமுறையை ஏன் தடுக்கவில்லை என இந்திய இளைஞர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்புகின்றனர். அதே போல்  இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் என்றால் மிகையாகாது.

வழக்கு பதிவால் இளைஞர்களின் கனவுகள் சிதைக்கிறது ! 

படித்த இளைஞர்கள் பெரும்பாலும் அரசுத்தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் இந்திய ஆட்சிப்பணி , ரயில்வே துறை , ராணுவ துறை , பெல் மற்றும் கெயில் போன்ற பொதுத்துறை நிறுவனத்தில் பணிப்புரிய அதற்கான தேர்வுக்களுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்குகளால் தேர்வுகளில் வெற்றி பெற்றாலும் இளைஞர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளால் அரசு பணி அவர்களுக்கு கேள்வி குறியாக மாறுகிறது. எனவே கல்வி கடன் பெற்றவர்களை குற்றவாளியாக கருதக்கூடாது என்ற கோரிக்கையை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ! 

வாராக்கடனில் கல்வி கடனை இணைப்பதை உடனடியாக அரசுகள் தடுக்க வேண்டும் எனவும் , வங்கிக்கடன் பெற்று திருப்பி செலுத்தாத இளைஞர்கள் மீதான குற்ற நடவடிக்கையில் இருந்து காக்க வேண்டும் என அரசுக்கு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக வாராக்கடன் சட்டத்தில் இருந்து கல்விக்கடனை நீக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.


பி.சந்தோஷ் , சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story

 உடல் உறுப்பு தானம்; கல்வி செலவை ஏற்ற அமைச்சர் காந்தி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Minister Gandhi bears the education expenses of the organ donor's children

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அவரைக்கரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ருத்திரகோட்டி(42). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் பிள்ளை ஒரு ஆண்  பிள்ளை உள்ள நிலையில் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விட்டார் இவர், கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரைக்கரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிஎம்சி ரத்தினகிரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, ருத்திரகோட்டியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், அவரது இதயம், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கும். கல்லீரல், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கார்னியா ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. 

Minister Gandhi bears the education expenses of the organ donor's children

மூளைச்சாவு அடைந்த ருத்திரகோட்டிக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி ஆகியோர் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெரிய பெண் பிள்ளைக்கு ஐடிஐ அரசு கல்லூரியில் சேர்த்து விடுவதாகவும் மீதமுள்ள இரண்டு மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகியோரின் பள்ளி படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.